முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளை தென்னிந்தியாவில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டம்?

சனிக்கிழமை, 10 மே 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

சென்னை : எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளை தென்னிந்தியாவில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒத்திவைப்பு...

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் இன்னும் லீக், பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி உட்பட 16 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இதனால் இந்த ஆட்டங்களை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நடத்தி முடிக்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் நடத்த... 

அதன்படி ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளை தென்னிந்தியாவில் நடத்த பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக சென்னை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய மைதானங்களை பி.சி.சி.ஐ. தேர்வு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து