முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதத்தை ஒழிக்க வாராணசி மசூதிகளில் சிறப்பு தொழுகை

சனிக்கிழமை, 10 மே 2025      இந்தியா
Varanasi--Spl-Mass-2025-05-

புதுடெல்லி, தீவிரவாதத்தை ஒழிக்க வாராணசி மசூதிகளில் தொழுகையில் சிறப்பு வேண்டுதல் இடம்பெற்றது. இது, பாகிஸ்தானுக்கான பதிலடியில் நாடு முழுவதிலும் தொடரும் ஒற்றுமையாகக் கருதப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடத்தப்பட்ட பயங்கரவாத சம்பவம், நாட்டையே உலுக்கியது. பயங்கரவாதிகள் மதத்தின் அடிப்படையில் அப்பாவி மக்களைத் தேர்ந்தெடுத்து குறிவைத்து தாக்கினர். இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு எதிராக நாடு முழுவதும் கோபம் நிலவுகிறது. அதே நேரத்தில், பயங்கரவாதத்துக்கு எதிரான ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்துக்கு எடுத்துக்காட்டான நிகழ்வுகளும் பல இடங்களில் நடைபெறுகின்றன.

அதற்கு ஓர் உதாரணச் சம்பவம் உத்தர பிரதேசத்தின் வாராணசியில் நடந்துள்ளது. உத்தர பிரதேசம் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி, கியான்வாபி மசூதி உள்ளது. ஜாமியா மசூதியான அதனுடன் சேர்த்து நகரின் அனைத்து மசூதிகளிலும் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதுபோன்ற, வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைகளில் நாடு அல்லது உலக அளவில் நடைபெறும் சம்பவங்கள் முக்கிய இடம்பெறுவது வழக்கம். 

இந்தவகையில், நேற்றைய சிறப்பு தொழுகையின் இறுதியில் அவர்களது இறைவனிடம் கேட்கப்பட்ட ‘துவா’ எனும் வேண்டுதலில் இருநாடுகளுக்கும் இடையிலானப் போர் இடம்பெற்றது. இந்தத் தொழுகையில், பங்கேற்ற ஏராளமான முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டினர். இத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான எல்லைப் போரில் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கவும் துவா செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து