எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : இந்தியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பான சுதர்சன் சக்ராவை தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் கூறுவது தவறான தகவல் என்று இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையோர மாநிலங்களான பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் மே 8, 9ஆம் தேதி நள்ளிரவில் ட்ரோன் தாக்குதல் நடத்தினர். இது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானின் தொடர் ட்ரோன் தாக்குதலை, இந்திய வான் பாதுகாப்புப் பிரிவு எந்தவித சமரசமும் இன்றி துல்லிய தாக்குதல் நடத்தி அனைத்தை ட்ரோன்களையும் அழித்தொழித்தது.
இந்தப் பரபரப்புக்கு மத்தியில் ஜே.எப்-17 போர் விமானங்களில் இருந்து ஏவப்பட்ட ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் ஆதம்பூரில் இந்தியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பான சுதர்சன் சக்ராவை தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் கூறுவது தவறான தகவல் என்று இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாகிஸ்தான் விமானப்படையின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஆதம்பூரில் உள்ள எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை அழித்ததாக பாகிஸ்தானில் செய்தி வெளியிடப்பட்டது. இந்தியாவின் பஞ்சாபில் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தானின் ஜேஎஃப்-17 தண்டர் ஜெட் அழித்ததாக சீன செய்தி நிறுவனமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இது சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து மீண்டும் பாகிஸ்தான் பொய்யான தகவல்கள் பரப்பி வருகிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


