முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு: யாரும் உரிமை கோருவது நியாயம் அல்ல: வி.சி.க. தலைவர் திருமாவளவன் கருத்து

வியாழக்கிழமை, 15 மே 2025      தமிழகம்
Thirumavalavan 2023-09-26

கோவை, பொள்ளாட்சி பாலியல் வழக்கில் யாம் எரிமை கோருவது நியாயம் அல்ல என்று திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் கோவை நவஇந்தியா எஸ்.என்.ஆர். அரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, தமிழ்நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்திய செயல். இதுபோன்ற கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இனி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் எங்கும் நடக்கக்கூடாது என்ற அளவிற்கு இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கு எனது பாராட்டுகள். இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பித்து விடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் அரசு தரப்பில் உறுதியாக நின்று வக்கீல்கள் வாதாடி இருக்கிறார்கள். அவர்களையும் பாராட்டுகிறேன். இது பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமன்றி மனிதநேயம் உள்ள அனைவருக்கும் ஒரு கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்தாகவே அமைந்து இருக்கிறது.

இந்த வழக்கின் தீர்ப்புக்கு தி.மு.க., அ.தி.மு.க., வி.சி.க. என யாரும் உரிமை கோருவதில் நியாயம் இல்லை. சான்றுகள் வலுவாக இருந்தது. குறிப்பாக செல்போன்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் பதிவு செய்த தடயங்கள் இந்த தண்டனைக்கு ஆதாரங்களாக இருந்தது. அதனால் அவர்களால் தப்பிக்க இயலவில்லை. யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து