Idhayam Matrimony

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: தமிழில் 8, அறிவியலில் 10,838 பேர் சதம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: தமிழில் 8, அறிவியலில் 10,838 பேர் சதம்

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      தமிழகம்
Anbil 1

Source: provided

சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பாட வாரியாக 100-க்கு 100 முழு மதிப்பெண்கள் எண்ணிக்கையைப் பொறுத்த வரையில் தமிழில் 8 பேரும், அதிகபட்சமாக அறிவியலில்10,838 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை சென்னையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று (மே.16) காலை 9 மணியளவில் வெளியிட்டார்.

அதன்படி, 10-ம் வகுப்பில் ஒட்டுமொத்தமாக 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவியர் 95.88 சதவீதமும், மாணவர்கள் 91.74 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் 2.25% அதிகரித்துள்ளது. இருப்பினும், வழக்கம்போல் இந்த அண்டும் மாணவர்களைவிட மாணவியர் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் 

பாட வாரியாக 100-க்கு 100 முழு மதிப்பெண்கள் எண்ணிக்கையைப் பொறுத்த வரையில் தமிழில் 8 பேரும், அதிகபட்சமாக அறிவியலில் 10,838 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதன்படி தமிழ் பாடத்தில் 8, ஆங்கிலத்தில் 346, கணிதத்தில் 1996, அறிவியலில் 10838, சமூக அறிவியலில் 10,256 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதேபோல். பாடவாரியாக தேர்ச்சி விகிதமானது, தமிழ்: 98.09%, ஆங்கிலம்: 99.46%, கணிதம்: 96.57%, அறிவியல்: 97.90%, சமூக அறிவியல்: 98.49% என்றுள்ளது.

தேர்ச்சி விகிதத்தின்படி, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய மாவட்டங்கள் முதல் ஐந்திடத்தில் உள்ளன. அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் ஐந்து மாவட்டங்களிலும் சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களே இடம்பெற்றுள்ளன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து