எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காத்மண்டு : இமயமலையேற்றத்தின்போது இந்தியர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இந்தியா, நேபாளம் இடையே இமயமலை உள்ளது. இந்த மலையில் உள்ள எவரஸ் உள்ளிட்ட சிகரங்களில் ஏற உலகம் முழுவதும் இருந்து மலையேற்ற வீரர், வீராங்கனைகள், சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் மேற்குவங்காளத்தை சேர்ந்த சபரதா கோஷ் (வயது 45) நேபாளத்தில் இருந்து நேற்றுமுன்தினம் இமயமலையின் எவரஸ் சிகரம் நோக்கி மலையேற தொடங்கியுள்ளார். அவருக்கு வழிகாட்டியாக சம்பல் தமுக் என்பவர் சென்றுள்ளார். சபரதா கோஷுடன் மேலும் சில மலையேற்ற வீரர்கள் சென்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் மதியம் 2 மணியளவில் சிகரத்தை அடைந்தபின் அங்கிருந்து அனைவரும் முகாம் திரும்பியுள்ளனர். வரும் வழியில் சபரதா கோஷுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது வழிகாட்டி இரவு முகாமிற்கு வந்து தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, உயிரிழந்த சபரதா கோஷ் உடலை தேடும் பணியில் மலையேற்ற வீரர்கள் நேற்று ஈடுபட்டு வருகின்றனர். அவரது உடல் மீட்கப்பட்டு இந்தியாவில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


