முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூப்பர்பெட் கிளாசிக் செஸ்: பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா

சனிக்கிழமை, 17 மே 2025      விளையாட்டு
Pragnananda 2023-08-23

Source: provided

புகரெஸ்ட், : கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியான சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. இது அவர் வென்றுள்ள முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டமாகும்.

டை-பிரேக்கர்...

ருமேனியாவில் உள்ள புகரெஸ்ட் நகரில் நடைபெற்ற இந்த தொடரில் 10 சுற்றுகள் நடந்து முடிந்த நிலையில் 5.5 புள்ளிகளுடன் ஆர்.பிரக்ஞானந்தா, பிரான்ஸ் நாட்டின் கிராண்ட் மாஸ்டர்களான பிரான்ஸின் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா பிரூஸ்ஜா ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டை-பிரேக்கர் நடத்தப்பட்டது. முதல் டை-பிரேக்கரில் அலிரேசா ஃபிரூஸ்ஜா மற்றும் பிரக்ஞானந்தா விளையாடினர். ஆட்டம் டிரா ஆனதால் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது. 

பிரக்ஞானந்தா சாம்பியன்...

தொடர்ந்து நடைபெற்ற 2-வது டை-பிரேக்கரில் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா ஃபிரூஸ்ஜா இடையிலான ஆட்டம் டிரா ஆனது. 3-வது டை-பிரேக்கரில் பிரக்ஞானந்தா, வச்சியர்-லக்ரேவை வீழ்த்தி 1 புள்ளியை பெற்றதோடு சாம்பியன் பட்டத்தையும் வென்றார். இந்த வெற்றியின் மூலம் 77,667 டாலர்கள் அவருக்கு பரிசுத் தொகை கிடைத்துள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 66.48 லட்சம் என தெரிகிறது. 

நம்பமுடியாத உணர்வு...

“ருமேனியாவில் உள்ள புகரெஸ்ட் நகரில் நடைபெற்ற சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரை வென்றுள்ளது. நம்பமுடியாத உணர்வை இது தருகிறது. எனக்கு தொடர்ந்து ஊக்கம் தரும் அணியினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி!” என பிரக்ஞானந்தா கூறியுள்ளார். இந்த தொடரில் குகேஷ் 6-ம் இடம் பிடித்துள்ளார்.

முதல்வர் பாராட்டு

இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- ருமேனியா சூப்பர் பெட் செஸ் கிளாசிக் தொடரில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் கிளாசிக்கல் மற்றும் பிளிட்ஸ் சுற்றுகளில் அவரது அசாத்திய திறமை வெளிப்பட்டது. செஸ் போட்டிகளில் இந்த அற்புதமான தருணத்தை தமிழ்நாடு கொண்டாடுகிறது என முதல்வர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து