முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரபிக்கடல் பகுதியில் மே 22ல் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

சனிக்கிழமை, 17 மே 2025      தமிழகம்
rain 2023-05-25

சென்னை, அரபிக்கடல் பகுதியில் வரும் 22 ம் தேதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது. மேலும், தமிழகத்தில் வரும் 20 வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது (புயல் சின்னம்) மத்திய கிழக்கு கர்நாடகத்தை ஒட்டிய அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி (புயல் சின்னம்) உருவாகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து மே 20 வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வடமாநிலங்களில் சில நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் 21 அல்லது 22 ஆகிய தேதிகளில் லேசான மழைப்பொழிவு இருக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி கூறியுள்ளார்.

வடமேற்கு இந்தியாவில் வடக்கு-தெற்கு உயர் அழுத்தம் விளைவாக பஞ்சாப், அரியானா, டெல்லி மற்றும் வடக்கு ராஜஸ்தானில் கடந்த சில நாட்களாக 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வலிமையான மேற்பரப்பு காற்று வீசியது. இதன் விளைவாக, மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் சில பகுதிகளில் புழுதி பரவியது. இதனால், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும் தெளிவற்ற வானிலை காணப்பட்டது. டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. எனினும், 20-ந்தேதிக்கு பின்னர், 21 அல்லது 22 ஆகிய தேதிகளில் டெல்லியில் லேசான மழைப்பொழிவு இருக்க கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து