முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது கட்டத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு: இஸ்ரோவின் 101-வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி. சி - 61 தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2025      இந்தியா
ISRO 2025-05-18

Source: provided

ஸ்ரீஹரிகோட்டா : பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் விண்ணில் பாய்ந்த நிலையில் அது தோல்வியடைந்தது. ராக்கெட் ஏவப்பட்ட நிலையில் 3-வது கட்டத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் நேற்று காலை 5.59 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. ஆனால், விண்ணில்  பாய்ந்த சில நிமிடங்களில் பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தோல்வியடைந்தது. 

இந்த ராக்கெட்டில் 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். அனைத்து கால நிலைகளிலும் துல்லியமாக படங்களை எடுக்கும் திறன் கொண்டது. திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்கோளை ராக்கெட் நிலை நிறுத்த முயற்சித்தது.  ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் தோல்வியடைந்தது.

விவசாயம், கடல் வளம், வெள்ளம் கண்காணிப்பு, கடலோர பாதுகாப்பிற்கும் இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட இருந்தது. பூமியில் எந்தவொரு இடத்தையும் துல்லியமாக படம் பிடிக்கும் கேமரா கொண்ட செயற்கைக்கோள் இதுவாகும். இஸ்ரோ ஏவிய 101-வது ராக்கெட் இதுவாகும். ஆனால், ஏவிய சில நிமிடங்களில் ராக்கெட் தோல்வியடைந்தது. இதனால், செயற்கைக்கோளை திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்த முடியவில்லை. இந்த தோல்வி குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தோல்வியடைந்தது குறித்து இஸ்ரோ தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் ஏவப்பட்டு 2 கட்டங்கள் வெற்றியடைந்த நிலையில் 3வது கட்டத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் ராக்கெட் அதன் இலக்கை அடையாமல் தோல்வியடைந்தது. இது குறித்து முழுமையாக ஆய்வு மற்றும் விசாரணையை மேற்கொண்டு நாங்கள் மீண்டு வருவோம்' என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து