முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: மா.செ.க்களுக்கு த.வெ.க. உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2025      தமிழகம்
Bussy-Anand 2023-11-03

Source: provided

சென்னை : முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி  மாவட்டச் செயலாளர்களுக்கு த.வெ.க. உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என். ஆனந்த், மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :-

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி   த.வெ.க. தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி மாவட்ட செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இலங்கையில் நடந்த ஈழப் போரில் உயிரி ழந்த ஈழத் தமிழர்களை நினைவு கூறும் விதமாக இன்று (நேற்று) மாலை 6 மணி அளவில் தங்கள் மாவட்ட அலுவலகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் தினம் அனுசரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

நிகழ்ச்சி நடத்திய புகைப்படங்களையும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். கட்சி தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள படத்தை தவிர எந்த படத்தையும் பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். நினைவேந்தல் நிகழ்ச்சியில் எழுப்பப்பட வேண்டிய கோஷங்களும் கட்சித் தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து