எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அமராவதி : ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயநகரத்தில் கார் கதவுகள் மூடியதால் மூச்சுத் திணறி 4 குழந்தைகள் உயிரிழந்தனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் கண்டோன்மென்ட் கீழ் உள்ள துவாரபுடி அருகே நேற்று காலை உதய் (வயது 8), சாருமதி (8), கரிஷ்மா (6), மானஸ்வி (6) ஆகியோர் விளையாட வெளியே சென்றிருந்தனர். இதில் சாருமதியும் கரிஷ்மாவும் சகோதரிகள், மற்ற இருவரும் அவர்களது நண்பர்கள். இவர்கள் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவுகள் பூட்டப்படாததால், விளையாட்டு போக்கில் அவற்றைத் திறந்து வாகனத்தில் அமர்ந்தனர். பின்னர் கதவுகள் தற்செயலாகப் பூட்டப்பட்டு, அவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் வெகு நேரமாக சிக்கிக்கொண்ட குழந்தைகள் ஒரு கட்டத்திற்கு மேல் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தனர்.
இதனிடையே, நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் அவர்களைத் தேடத் தொடங்கினர். இறுதியில், உள்ளூரில் உள்ள ஒரு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் அவர்களின் உடல்கள் பிணமாக கண்டெடுக்கப்பட்டன. இதனைக்கண்ட பெற்றோர்கள் கதறி அழுதனர். இது குறித்து தவலறிந்த போலீசார் குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


