முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேன்ஸ் திரைப்படவிழா: குங்குமம் வைத்து வந்த ஐஸ்வர்யா ராய்

வியாழக்கிழமை, 22 மே 2025      உலகம்
ishwarya

Source: provided

கேன்ஸ் (பிரான்ஸ்): நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் புடவையுடன் குங்குமம் வைத்து வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

2025-ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸின் கேன்ஸ் நகரில் கடந்த மே 13 ஆம் தேதி துவங்கியது. 11 நாள்கள் நடைபெற்று மே 24 ஆம் தேதியன்று நிறைவடையவுள்ளது. உலகின் சிறந்த திரைப்பட விழாக்களில் முதன்மையானதாகக் கருதப்படும் கேன்ஸ் விழாவில் பங்கேற்க உலகம் முழுவதுமிருந்து சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் கலந்துகொள்வது வழக்கம்.

அப்படி, இந்தியாவிலிருந்து பல பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டாலும் ஒவ்வொரு ஆண்டும் நடிகை ஐஸ்வர்யா ராய் தவறாமல் கலந்துகொள்கிறார்.  மேலும், இந்தியப் பண்பாடு மற்றும் பிரதிநிதிப்படுத்தும் விஷயங்களுக்காகவும் ஐஸ்வர்யா ஒவ்வொரு ஆண்டும் கலந்துகொள்கிறார். ஆண்டுதோறும் விதவிதமான ஆடைகளில் தோற்றமளிக்கும் ஐஸ்வர்யா ராய், இந்த முறை பனாரஸ் புடவையில் நெற்றியில் குங்கும (சிந்தூர்) திலகமிட்டபடி சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

ஐஸ்வர்யா ராய் இந்தத் தோற்றத்தில் வந்ததற்குக் காரணம், காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் பலியானதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிட்ட தாக்குதல் ஒன்றை பாகிஸ்தானில் நடத்தியது. அதைக் குறிப்பிடும் வகையிலேயே, ஐஸ்வர்யா இந்தத் தோற்றத்தில் வந்திருப்பார் என்றே ஊகிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து