முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஓகா ஓய்வு: கடைசி வேலை நாளிலும் 10 தீர்ப்பு

வெள்ளிக்கிழமை, 23 மே 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடில்லி: ஓய்வுபெறும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.எஸ். ஓகா, மரபை ஒதுக்கி, கடைசி வேலை நாளிலும் 10 வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்த்தின் மிக மூத்த நீதிபதிகளில் மூன்றாவது நீதிபதியாக அறியப்படும் அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா என்னும் ஏ.எஸ். ஓகா நேற்றுடன் பணி ஓய்வுபெற்றார். தனது கடைசி வேலை நாளான நேற்றும், அவர் தான் விசாரித்து வந்த 10 வழக்குகளில் தீர்ப்பளித்திருக்கிறார். ஓகாவின் தாய் இறந்து இரண்டு நாள்களில் பணிக்குத் திரும்பியிருக்கும் ஏ.எஸ். ஓகா, மே 24ஆம் தேதியுடன் பணி ஓய்வுபெறும் நிலையில் நேற்று அவரது கடைசி பணி நாளாக அமைந்துவிட்டது.

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெறும் ஏ.எஸ். ஓகா, தனது பணிக்காலத்தில் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு மூலம் முன்னுதாரணமாக மாறியிருக்கிறார். நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவைக்கும் அநீதியை எதிர்த்துப் போராடும் திறனுக்கும் வழக்குரைஞர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

கடந்த 21ஆம் தேதி, சுப்ரீம் கோர்ட் பதிவு பெற்ற வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் அவருக்கு அளிக்கப்பட்ட பிரியாவிடை நிகழ்ச்சியின் போதுதான், நீதிபதி ஏ.எஸ். ஓகா, தனது தாய் வசந்தி ஓகா காலமானதாகவும், வியாழக்கிழமை அவரது இறுதிச் சடங்குகள் தாணேவில் நடைபெறவிருப்பதாகவும் அறிவித்தார். நேற்று நேற்று தாயாரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்ற நிலையில், நேற்று பணிக்குத் திரும்பிய நீதிபதி ஏ.எஸ். ஓகா, தான் விசாரித்து வந்த 10 வழக்குகளில் தீர்ப்பையும் வெளியிட்டுள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து