Idhayam Matrimony

பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டம் ஜூன் 3-ல் விரிவாக்கம்

வெள்ளிக்கிழமை, 23 மே 2025      தமிழகம்
School-students 2023 06 26

Source: provided

சென்னை: பள்ளி குழந்தைகளுக்காக  காலை உணவுத் திட்டம் வரும் ஜூன் 3-ந்தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படுகிறது.  

தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளுக்காக காலை உணவுத் திட்டம் 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு ஊரகப் பகுதிகளில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 30,992 அரசு பள்ளிகளிலும், ஊரகப் பகுதிகளில் உள்ள 3,995 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 17.53 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

நடப்பு கல்வியாண்டு முதல், நகர்ப்புறங்களில் இயங்கி வரும் 1,545 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டது.

பட்ஜெட்டில் அறிவித்த படி நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதியில் இருந்து காலை உணவு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து