முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நடுவர்களை அறிவித்த ஐ.சி.சி

வெள்ளிக்கிழமை, 23 மே 2025      விளையாட்டு
ICC 2023 08 04

Source: provided

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நடுவர்கள் விவரங்களை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. 

இறுதிப்போட்டி...

2023-25 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த போட்டி அடுத்த மாதம் 11-15 வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக பலர் கூறிவருகின்றனர். அதேவேளையில், இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல தென் ஆப்பிரிக்கா முயற்சிக்கும். இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடுவர்களாக செயல்பட உள்ளவர்களின் விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ளது.

ஜவகல் ஸ்ரீநாத்... 

அதன்படி, கள நடுவர்களாக நியூசிலாந்தின் கிறிஸ் கேப்னி மற்றும் இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் செயல்படுவார்கள் எனவும், 3வது நடுவராக இங்கிலாந்தின் ரிச்சர்ட் கெட்டில் பரோவும், 4வது நடுவராக இந்தியாவின் நிதின் மேனனும் செயல்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், போட்டி நடுவராக (ரெப்ரீ) இந்தியாவின் ஜவகல் ஸ்ரீநாத் மேற்பார்வையிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.30.78 கோடி பரிசு...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.30.78 கோடியும், இறுதிப்போட்டியில் தோல்வியடையும் அணிக்கு ரூ.18.46 கோடியும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 7 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 8 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 9 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து