முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

செவ்வாய்க்கிழமை, 3 ஜூன் 2025      இந்தியா
Rangasamy 2023 07-16

Source: provided

புதுச்சேரி: “கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது என்று புதுவை முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுவை அரசு சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் நேற்று (ஜூன் 3) கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவை கடற்கரை சாலையில் உள்ள மேரி ஹாலில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்சரவணன் குமார் (பாஜக), எதிர்கட்சித்தலைவர் சிவா, பேரவை துணைத்தலைவர் ராஜவேலு, எம்எல்ஏக்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார், கேஎஸ்பி.ரமேஷ், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: “கொரோனா பாதிப்பு பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை. அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. முககவசம் அணிய வேண்டிய அவசியம் இப்போது இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. மருத்துகளும் போதிய அளவில் உள்ளது. மத்திய அரசின் அனைத்து வழிகாட்டுலும் பின்பற்றப்படுகின்றன,” என்றார்.

2026ம் ஆண்டு தேர்தலுக்கு என்.ஆர்.காங்கிரஸ் தயாராக உள்ளதா? என கேள்விக்கு, “தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம்” என்றார். வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் நீடிக்குமா? அணி மாறுமா? என்ற கேள்விக்கு, முதல்வர் ரங்கசாமி பதிலளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து