முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      ஆன்மிகம்
PK-Sekhar-Babu-2025-06-02

தூத்துக்குடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  நேற்று தொடங்கி வைத்தார்.

2025–2026-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது, 'சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு 10 திருக்கோயில்களில் தினசரி காய்ச்சிய பால் வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் தொடக்க விழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று (ஜூன் 2) காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். கூடுதல் ஆணையர் சி.பழனி முன்னிலை வகித்தார். தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து, குழந்தைகளின் தாய்மாரிடம் காய்ச்சிய பால் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: இத்திட்டமானது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோவில்களில்  செயல்படுத்தப்பட்டு, காய்ச்சிய பால் வழங்கப்படுகிறது. இதற்கான செலவு ரூ.50 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டமானது தரிசனத்துக்கு வரிசையில் காத்திருக்கும் பெற்றோருக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் பேருதவியாக இருக்கும் ” என்று  கூறினார்.

மேலும் வருகின்ற ஜூலை 7ம் தேதி நடைபெற உள்ள திருச்செந்தூர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவில் லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அதற்கு தகுந்தாற்போல பக்தர்களுக்கு தேவையான உணவு வசதிகள், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், மருத்துவ வசதி போன்ற வசதிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தோம் என அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர்கள் எம்.அன்புமணி, எஸ்.ஞானசேகரன், திருக்கோயில் தக்கார் ஆர்.அருள் முருகன், கோட்டாட்சியர் சுகுமாறன், வட்டாட்சியர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து