முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்மாதம் வெளியாகும் கண்ணப்பா திரைப்படம்

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      சினிமா
Kannappa 2025-06-02

Source: provided

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பான ‘கண்ணப்பா’ 

வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சிகள் பத்திரிகையாளர்களுக்கு திரையிடும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஷெல்டன், அவர் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார். நான் இரண்டாவது யூனிட்டாக பணியாற்றியிருக்கேன். ஏன் என்றால், என் சகோதரர் விஷ்ணுவுக்காக தான். அவர் தான் என்னை தெலுங்கு சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினார். அவருடைய ஐந்து படங்களுக்கு நான் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கேன், அவருக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். ஷெல்டனுக்காக நான் பேசுகிறேன், அவர் நம்ம பணிக்கு ஏற்றபடி உடனடியாக மாறிவிட்டார். மிக வேகமாக வேலை செய்யக்கூடியவர். இப்படி ஒரு படத்தை விரைவாக முடிக்க முடிந்தது என்றால் அது ஷெல்டனால் தான், அவருக்கு என் வாழ்த்துகள். விஷ்ணு சார் இந்த படத்தின் மூலம் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். ஒரு நடிகராக மட்டும் இன்றி கதையாசிரியராகவும் அவர் அவதாரம் எடுத்திருக்கிறார், அவர் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இயக்குநர் முகேஷ் குமார் சிங்கிற்கு என் வாழ்த்துகள். நன்றி.” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து