முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூன் 2025      ஆன்மிகம்
Palani 2025-06-01

Source: provided

பழனி : வார விடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் திரளான பக்தர்கள் வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றி வழிபடுகின்றனர். வழக்கமான நாட்களைவிட வாரவிடுமுறை, முகூர்த்த நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பது வழக்கம். அந்தவகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

காலை முதலே பழனி முருகன் கோவில், திருஆவினன்குடி கோவில், பாதவிநாயகர் கோவில் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகம் இருந்தது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல பயன்படுத்தும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது. இதனால் பொது தரிசனம், கட்டண தரிசனம் மற்றும் சிறப்பு தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதாவது, தரிசனம் செய்வதற்கு சுமார் 1 1/2 மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது.

வெளியூர் பக்தர்கள் பழனிக்கு கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு பகுதிகளில் நெரிசல் காணப்பட்டது. அதேபோல் தரிசனம் முடிந்து சொந்த ஊருக்கு செல்ல பழனி பஸ் நிலையத்தில் பக்தர்கள் குவிந்ததால் அங்கும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து