முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு

செவ்வாய்க்கிழமை, 3 ஜூன் 2025      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஆவடி தேர்வு மையத்தில் நீட் தேர்வெழுதிய 13 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “மருத்துவ இளநிலைப் படிப்புக்காக நீட் நுழைவுத் தேர்வு 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில், கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் சிரமப்பட்டனர். இதனால்,  தங்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்,” என்று கோரியிருந்தனர்.

 வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்டு, அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், “மாணவர்கள் கோரிக்கையை மத்திய அரசு கவனமாக பரிசீலித்தது. மின்தடை ஏற்பட்டது உண்மைதான். ஆனால், அப்போது இருந்த வெளிச்சத்தை வைத்து மாணவர்கள் தேர்வை முழுவதுமாக எழுதி முடித்து விட்டார்கள். தேர்வு நடந்த சமயத்தில் யாரும் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அனைத்து கேள்விகளுக்கும் மாணவர்கள் விடைகள் எழுதிவிட்டனர். எனவே மாணவருடைய கோரிக்கை மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து