முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய இணையதளம் ஜூன் 6-ல் துவக்கம் மத்திய அரசு முடிவு

செவ்வாய்க்கிழமை, 3 ஜூன் 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடில்லி: வக்ப் சொத்துக்களை பதிவு செய்வதற்காக, இணையதளத்தை (வக்ப் சொத்து மேலாண்மைக்கான உமீத் போர்டல்) ஜூன் 6ம் தேதி மத்திய அரசு தொடங்க உள்ளது.

வக்ப் போர்டு சொத்து தொடர்பாக பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்திற்கு எதிராக, காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், ஏராளமான முஸ்லிம் அமைப்புகள் என, 100க்கும் அதிகமான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விவாதம் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில், வக்ப் சொத்துக்களை பதிவு செய்வதற்காக, இணையதளத்தை (வக்ப் சொத்து மேலாண்மைக்கான உமீத் போர்டல்) ஜூன் 6ம் தேதி மத்திய அரசு தொடங்க உள்ளது.

இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

நாடு முழுவதும் உள்ள வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய, இந்த இணையதளம் தொடங்கப்படுகிறது. அனைத்து வக்ப் சொத்துக்களும் 6 மாதங்களுக்குள் விரிவான தகவலுடன் பதிவு செய்யப்பட வேண்டும். சலுகைக் காலத்திற்குப் பிறகு பதிவு செய்யப்படாத சொத்துக்கள் சர்ச்சைக்குரியதாக கருதப்படும்.  சொத்துக்களின் நீளம், அகலம் மற்றும் புவிசார் குறிச்சொற்கள் கொண்ட இடங்கள் உள்ளிட்ட விரிவான விளக்கங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து