முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

செவ்வாய்க்கிழமை, 3 ஜூன் 2025      உலகம்
Earthquack 2024-12-06

Source: provided

கராச்சி: நிலநடுக்க சூழ்நிலையை பயன்படுத்தி பாகிஸ்தானில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில்16 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காக கராச்சியின் மாலிர் சிறையில் இருந்த கைதிகள் மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்காக விடுவிக்கப்பட்டனர்.

இதனை பயன்படுத்திக்கொண்ட கைதிகள் 200-க்கும் மேற்பட்டோர் சிறையில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

சம்பவம் நடந்த நேரத்தில் மாலிர் சிறையில் 6 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கைதிகள் இருந்தனர், அவர்களில் பெரும்பாலோர் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் ஈடுபட்டவர்கள். நிலநடுக்கத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 600க்கும் மேற்பட்ட கைதிகள் தங்கள் முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போது சிறையில் இருந்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றனர். அவர்களில் 80-க்கும் மேற்பட்ட கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். 135-க்கும் மேற்பட்ட கைதிகள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து