முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி

செவ்வாய்க்கிழமை, 3 ஜூன் 2025      தமிழகம்
Veeraanam

Source: provided

கடலூர்: வீரணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார் கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக பயன்பட்டு வருகிறது.

மேலும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பினரும், விவசாயிகளும் இந்த ஏரி நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏரியின் நீர் மட்டம் 47.50 அடியாகும். இந்த நிலையில் பல்வேறு வழிகளில் இருந்து ஏரிக்கு 342 கன அடி தண்ணீர் வரத்து வருவதால் தற்போது வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50அடியை எட்டி உள்ளது.

மேலும் சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. ஏரியின் மொத்த நீர் இருப்பு 1,465 மில்லியன் கன அடியில் அதன் முழு கொள்ளளவான 1,465 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை காலத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து வழிகளான வடவாறு, செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வடிகால் வாய்க்கால்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வழியாக தொடர்ந்து நீர் வரத்து வந்து கொண்டிருந்தது.

இதனால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து தற்போது 47.50 அடி கொள்ளளவை எட்டியது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 650 மில்லியன் கன அடியாக சரிந்த நிலையில் தொடர்ந்து நீர் வரத்தின் காரணமாக ஏரியில் நீர் வரத்து 2 வாரங்களில் உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உள்ள நிலையில் தண்ணீரை விரயமாக்காமல் கவனமாக பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து