முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ம் கட்ட கும்பாபிஷேகம்: அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிப்பு

செவ்வாய்க்கிழமை, 3 ஜூன் 2025      இந்தியா
Ayodhya-temple 2024-02-16

Source: provided

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்களுக்கு கோயில் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயிலின் இரண்டாம் கட்ட சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழா தொடங்கியதையடுத்து, வானிலை மோசமாக இருக்கும் காரணத்தால் அதிகளவிலான பக்தர்கள் கூட வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயிலின் சிலை பிரதிஷ்டை விழா கடந்தாண்டு ஜனவரி மாதம், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்புடன் நடத்தப்பட்டது. தொடர்ந்து முதல் தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று முதல் மூன்று நாள்களுக்கு கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெறுகின்றன. 

இதற்காக நேற்று முன்தினம் மாலை சராயு நதியில் இருந்து கலசம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயிலில் நிறுவப்பட்டது. மேலும், தங்க முலாம் பூசப்பட்ட குவிமாடமும் கோயிலின் கோபுரத்தில் நிறுவப்பட்டது. நேற்றும், இன்றும் பூஜைகள் நடைபெறவுள்ள நிலையில், ஜூன் 5 ஆம் தேதி முக்கிய நிகழ்வான சிலை பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. முதல் தளத்தில் கட்டப்பட்ட ராம் தர்பார் கும்பாபிஷேகம், ராமர், சீதா, லட்சுமணன், ஹனுமன் சிலைகள் பிரதிஷ்டை விழாவும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொள்ளவுள்ளார்.

மோசமான வானிலை காரணமாக அதிகளவிலான பக்தர்கள் வர வேண்டாம் என்று கோயில் நிர்வாகத்தின் செயலாளர் சம்பத் ராய் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், வானிலை நிலவரத்தால் பெரிய நிகழ்வை ஏற்பாடு செய்வது சாத்தியமில்லை என்றும் அதிகளவிலான பக்தர்கள் கூடி தேவையற்ற பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அயோத்தி நகர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, கோயில் வளாகத்தைச் சுற்றியும் பயங்கரவாத எதிர்ப்புப் படை கமாண்டோக்கள் கவச வாகனத்துடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து