முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரசாந்த் கிஷோர் மீது அவதூறு வழக்கு

செவ்வாய்க்கிழமை, 3 ஜூன் 2025      இந்தியா
Prashant-Kishore 2024-11-02

Source: provided

பாட்னா: ஜன் சூராஜ் கட்சித் தலைவரான பிரசாந்த் கிஷோருக்கு எதிராக பீகார் மாநில அமைச்சர் அஷோக் சௌதரி, அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான அஷோக் சௌதரி, தனது மகளுக்கு மக்களவையில் இடம் ஒதுக்க ஒன்றிய அமைச்சர் ஒருவருக்கு லஞ்சம் வழங்கினார் என அரசியல் வியூக வகுப்பாளரும் ஜன் சூராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பிரசாந்த் கிஷோருக்கு எதிராக அஷோக் சௌதரி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

பிரஷாந்த் கிஷோர், எனக்கும் எனது மகளுக்கும் எதிராகப் பேசிய அவதூறு கருத்துக்களைத் தொடர்ந்து, நான் அவருக்கு சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு, அவரது பதில் திருப்திகரமாக இல்லை. இதன்மூலம், அவர் கூறியதற்கு கொஞ்சமும் அவர் வருத்தப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இதனால், நான் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். பிரசாந்த் கிஷோருக்கு சவால் விடுகிறேன், நான் சிராக் பஸ்வானுக்கு பணம் வழங்கியதாக அவர் கூறுவதை நிருபித்து காட்டட்டும் அல்லது உங்களது கருத்தை மன்னிப்புடன் திரும்பப் பெறுங்கள். இந்தப் போராட்டத்தில், ஒருவேளைத் தேவைப்பட்டால் நான் உச்ச நீதிமன்றம் செல்லவும் தயாராக இருக்கிறேன். என அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளரான, பிரசாந்த் கிஷோரை, அரசியல் வியாபாரி என குறிப்பிட்ட சௌதரி, அவர் அனைத்துக் கட்சிகளுக்கும் பணத்துக்காகப் பணியாற்றினார் என விமர்சித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து