முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.வெ.க.வில் இணைந்த தி.மு.க., அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      தமிழகம்
Vijay 2024-11-25

Source: provided

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று இணைந்துள்ளனர்.

வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவுள்ள நிலையில், கட்சியை தொகுதிவாரியாக வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அவர்களின் கட்சிக்குள் முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் கூறி, த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தி.மு.க., அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று த.வெ.க.வில் இணைந்துள்ளனர். 2011 சட்டப்பேரவை தேர்தலில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். ராஜலட்சுமி த.வெ.க.வில் இணைந்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சியில் முக்கியத்துவம் அளிப்பதில்லை எனக் குற்றச்சாட்டை முன்வைத்து சில நாள்களுக்கு முன்பு பா.ஜ.க.வில் இணைந்த ராஜாட்சுமி, தற்போது த.வெ.க.வில் இணைந்துள்ளார்.

தி.மு.க.வைச் சேர்ந்த வைகுண்டம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த வால்பாறை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஸ்ரீதரன் ஆகியோரும் த.வெ.க.வில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் நீதிபதி சி. சுபாஷ், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மரிய வில்சன் உள்ளிட்டோரும் த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து