முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு சின்னசாமி மைதானத்தை அகற்ற பரிசீலனை: சித்தராமையா தகவல்

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      விளையாட்டு
Siddaramaiah 2023 04 16

Source: provided

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி மைதானத்தை நகரின் மையப்பகுதி யிலிருந்து அகற்ற பரிசீலிக்கப்பட்டு வருவதாக கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஆர்.சி.பி. சாம்பியன்...

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாம்பியன் கோப்பையை வென்ற ஆர்.சி.பி. அணிக்கு கடந்த 4-ந் தேதி பெங்களூரு விதானசவுதா முன்பு பாராட்டு விழாவும், சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டமும் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள ஆர்.சி.பி. ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் சின்னசாமி ஸ்டேடியத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகி இருந்தார்கள். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குற்றச்சாட்டு...

இந்த சம்பவத்திற்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக கிரிக்கெட் சங்கமே காரணம் எனக்கூறி கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும் பதிவாகி உள்ளது. இந்த விவகாரத்தில் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறி வருகிறார். ஆனால் அரசின் அலட்சியமே 11 பேர் சாவுக்கு காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள்.

காயப்படுத்தியுள்ளது...

இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தை நகரின் மையப்பகுதியிலிருந்து அகற்ற பரிசீலிக்கப்பட்டு வருவதாக கர்நாடக முதல் - மந்திரி சித்தராமையா தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இதுபோன்ற ஒரு விரும்பத்தகாத சம்பவம் எந்த அரசாங்கத்தின் கீழும் நடக்கக்கூடாது. தனிப்பட்ட முறையில், இந்த சம்பவம் என்னையும் அரசாங்கத்தையும் காயப்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஐந்து காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உளவுத்துறைத் தலைவரும் முதலமைச்சரின் அரசியல் செயலாளரும் மாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் சின்னசாமி மைதானத்தை நகரின் மையப்பகுதியிலிருந்து அகற்ற பரிசீலிக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து