முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்சியம்-4 விண்கலம் ஏவும் பணி இன்று ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 10 ஜூன் 2025      இந்தியா
Axiom-4-2025-06-10

புதுடெல்லி, வானிலை காரணமாக ஆக்சியம்-4 விண்கலம் ஏவுவது இன்று ஜூன் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ஆக்சியம் -4 நான்காவது மனித விண்வெளி பயணம் நேற்று (ஜூன் 10ம் தேதி) திட்டமிடப்பட இருந்தது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் 3 விண்வெளி வீரர்கள் என மொத்தம் 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தநிலையில், வானிலை காரணமாக ஆக்சியம்-4 விண்கலம் ஏவுவது இன்று ஜூன் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நாசா, இஸ்ரோ முயற்சியில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் ஆக்சியம்-4 திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விண்வெளி வீரர் சுக்லாவுடன், அமெரிக்காவை சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன் மற்றும் ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோரும் செல்கின்றனர்.

கடந்த 1984ம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் விண்வெளி பயணத்தில் இணைந்த ராகேஷ் சர்மாவின் வரலாற்று சிறப்புமிக்க விண்வெளி பயணத்திற்கு பின் 41 ஆண்டுகள் கழித்து ஆக்சியம் 4 திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்தியர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சுக்லா என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து