முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாட்ஸ்-அப், பேஸ்புக் மூலம் மக்களை கவர முடிவு: சமூக வலைத்தள அரசியல் பணிகளை முன்னெடுக்க த.வெ.க. திட்டம்

வியாழக்கிழமை, 12 ஜூன் 2025      அரசியல்
Vijay 2024-02-18

சென்னை, நேரடி மக்கள் சந்திப்புடன், சமூக வலைத்தள அரசியல் பணிகளை முன்னெடுக்க த.வெ.க. தயாராகி வருகிறது.

சட்டசபை பொது தேர்தலை சந்திக்க த.வெ.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. தேர்தலில் முக்கிய பங்களிப்பாக திகழும் பூத் கமிட்டிக்கு த.வெ.க. முழுமையாக நிர்வாகிகளை நியமித்து முடித்துள்ளது. அடுத்த கட்டமாக இணைய வழியில் மக்களை கவர விஜய் திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக சமூக வலைத்தளங்கள் வாயிலாக அரசியல் முன்னெடுப்புகளை தொடங்கி இருக்கிறார்.

சமூக ஊடகங்களை நிர்வகிக்க புதிய நிர்வாகிகளையும் விஜய் நியமித்துள்ளார். வாட்ஸ்-அப் குழுக்கள், பேஸ்புக், எக்ஸ் தளம் மூலம் கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்களை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. பூத் கமிட்டி வாரியாக குழுக்களை அமைத்து அவர்களுடன் உரையாடவும், கட்சி பணிகளை விரைவுபடுத்தவும் தேர்தல் காலக்கட்டத்தில் பலன் அளிக்கும் என்று விஜய் நம்புகிறார்.

விஜய் பங்கேற்கும் முக்கிய நிகழ்வுகளை நேரடியாக வலைத்தளங்கள் மூலம் ஒளிபரப்பவும், முக்கிய இடங்களில் உரிய அனுமதி பெற்று அகன்ற திரையில் ஒளிபரப்பவும் த.வெ.க. சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது. வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் நிர்வாகிகளிடம் தகவல் பரிமாற்றத்தை கொண்டு வந்து அதன் மூலம் உடனுக்குடன் கட்சி சார்ந்த திட்டங்களை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்ல விஜய் விரும்புகிறார். தற்போது அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.  

இது தவிர ஒவ்வொரு தொகுதியிலும் மக்களிடம் விஜய் காணொலி காட்சியாக சந்தித்து பேசும் வகையில் செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. நவம்பரில் கட்சி சின்னம் கிடைக்கும் பட்சத்தில் அதனை உடனடியாக கட்சியின் சமூக வலைத்தள குழுக்களில் பரப்பி, உடனுக்குடன் மக்கள் மத்தியில் கொண்டு செல்லவே இதற்கான ஏற்பாடு வகுக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடியான சமூக வலைத்தள அரசியல் எந்த வகையில், மக்கள் மன்றங்களில் த.வெ.க.வுக்கு கைகொடுக்கும் என்பது போக, போக தான் தெரியும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து