எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி: ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகர் அறிவித்துள்ளார். .
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று பிற்பகல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட 242 பேர் பயணித்த நிலையில், இதுவரை 200-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் மட்டுமே காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, விமானம் மோதிய பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5 மாணவர்களும் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விமான விபத்து சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கவுள்ளதாக டாடா குழுமம் மற்றும் ஏர் இந்தியாவின் தலைவர் என். சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும், காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மருத்துவச் செலவுகள் மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் டாடா குழுமம் செய்து தரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விபத்தில் சேதமடைந்த பி.ஜே. கல்லூரிக்கு புதிய கட்டடமும் கட்டித் தரப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது: அமைச்சர் துரைமுருகன்
16 Mar 2026சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத்தேர்தல் அதிகாரி ஆலோசனை
16 Mar 2026சென்னை, தமிழக பேரவைத் தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று (மார்ச் 16) ஆலோசனை மேற்கொண்டார்.
-
மகளிா் ஆதரவு இருக்கும் வரை, தி.மு.க. அரசை எவராலும் வீழ்த்த முடியாது: முதல்வர்
16 Mar 2026சென்னை, பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது.
-
6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீனா-வடகொரியா இடையே விமான சேவை தொடக்கம்
16 Mar 2026பெய்ஜிங், சீனா- வடகொரியா இடையேயான விமானப் போக்குவரத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
-
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 550 இந்தியர்கள் ஆர்மீனியாவுக்கு ஜெய்சங்கர் நன்றி
16 Mar 2026புதுடெல்லி, ஈரானில் இருந்து அர்மீனியா வழியாக 550க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை ஒன் பேட்டில் ஆஃப்டர் அனத
-
பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்: ஆஸ்கர் விழா மேடையில் ஹாலிவுட் நடிகர் ஜேவியரின் பேச்சால் பரபரப்பு
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம் ஆஸ்கர் விருது விழாவில், “போர் வேண்டாம். பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


