முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் கைது

திங்கட்கிழமை, 16 ஜூன் 2025      தமிழகம்
Jayaram 2025-06-16

Source: provided

சென்னை : ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., (ஆயுதப்படை பிரிவு) ஜெயராமை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கத்துடன், காதலனின் தம்பியான சிறுவனை கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பூவை ஜெகன்மூர்த்தி மீது குற்றம் சாட்டப்பட்டது. விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு, திருவள்ளூர் எஸ்.பி., தலைமையிலான போலீசார் சென்றனர்.

அப்போது, அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கில் திரண்டு போலீசாருக்கு இடையூறு செய்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்டுபூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாகி விட்டார். இதனிடையே சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமின் கோரியிருந்தார்.

வழக்கு விசாரணையின் போது, பூவை ஜெகன் மூர்த்தி மட்டுமின்றி ஏ.டி.ஜி.பி., ஜெயராமிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் இருவரும்   விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.

 இந்நிலையில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம், பூவை ஜெகன்மூர்த்தி இருவரும் நேற்று  உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ஏ.டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்து காவலில் வைக்க உத்தரவிட்டார். எம்.எல்.ஏ., பூவை ஜெகன் மூர்த்திக்கு கடுமையான கேள்விகளை நீதிபதி எழுப்பினார்.

இந்த வழக்கு விசாரணையில், 200-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம். நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள். விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள். விசாரணைக்கு தனியாக வர வேண்டும். கட்டப்பஞ்சாயத்து செய்யவா உங்களை மக்கள் ஓட்டு போட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பினார்கள் என்று நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கு ஜூன் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. ஏ.டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்து காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டநிலையில் அவரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து