எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான சாய் சுதர்சனும் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில், இந்திய அணிக்காக விளையாட தனக்கு வாஷிங்டன் சுந்தர் ஊக்கமளித்தாக சாய் சுதர்சன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக சாய் சுதர்சன் பேசியதாவது: வாஷிங்டன் சுந்தருக்கு எதிராக சில போட்டிகளில் நான் விளையாடியுள்ளேன். அவருக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சிறப்பானதாக இருக்கும். வாஷிங்டன் சுந்தர் ஐ.பி.எல். தொடரில் நன்றாக விளையாடினார். அதன் பின், அவர் இந்திய அணிக்காக விளையாடினார். சென்னையைச் சேர்ந்த ஒருவர் இந்திய அணிக்காக விளையாடுகிறார் என்பது மிகவும் ஊக்கமளித்தது. வாஷிங்டன் சுந்தரை எனக்கு இளம் வயதிலிருந்தே தெரியும். அதுவே அவரைப் போன்று நானும் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. அவர் எனக்கு மிகவும் ஊக்கமளிப்பவராக உள்ளார் என்றார்.
________________________________________________________________________________________________________
திண்டுக்கல் அணி மீது புகார்
டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கடந்த 14-ந்தேதி சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது. இந்தப் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ரசாயனம் தடவப்பட்ட துண்டுகளை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் அணி நிர்வாகம் புகார் அளித்து உள்ளது.
இதற்கிடையே டி.என்.பி.எல். தலைமை செயல் அதிகாரி பிரசன்னாவுக்கு மதுரை பாந்தர்ஸ் அணியின் சி.ஒ.ஒ. எஸ்.மகேஷ் எழுதி உள்ள கடிதத்தில், எங்களுக்கு எதிராக சமீபத்தில் நடந்த போட்டியில் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக ஒரு தீவிரமான விஷயத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். போட்டிக்கு முன்பு நடுவர்கள் பலமுறை எச்சரிக்கை செய்த போதும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ரசாயனங்கள் தடவப்பட்டதாக தோன்றும் துண்டுகளை பயன்படுத்தி பந்தை வெளிப்படையாக சேதப்படுத்தியது. இது ஆட்டத்தின் முடிவை பாதித்தது மட்டுமல்லாமல் எங்கள் இளம் அணியை மனசோர்வடைய செய்தது. நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
________________________________________________________________________________________________________
அணியுடன் இணைந்த காம்பீர்
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி வருகிற ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸில் தொடங்குகிறது. இந்நிலையில் மருத்துவ அவசரம் காரணமாக கடந்த வாரம் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் அவசரமாக தாயகம் திரும்பினார். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் காம்பீரின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் அணியுடன் இணைவார் என பி.சி.சி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் மீண்டும் இந்திய அணியுடன் இன்று (ஜூன் 17) இணையவுள்ளதாக பி.சி.சி.ஐ. தகவறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீரின் தாயார் நலமாக உள்ளார். மீண்டும் இந்திய அணியுடன் இணைவதற்காக கௌதம் காம்பீர் நாளை இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஹாக்கி அணி தோல்வி
9 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ ஹாக்கி லீக் போட்டியின் ஐரோப்பிய சுற்று பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப்பில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.
இந்திய அணியில் சஞ்சய் மற்றும் தில்பிரீத்சிங் தலா ஒரு கோல் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் டிம் பிராண்ட், பிளேக் கவர்ஸ் மற்றும் கூப்பர் பர்ன்ஸ் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த சுற்றில் இந்திய அணிக்கு தொடர்ச்சியாக சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும். இப்படி தொடர் தோல்விகளால் துவண்டுபோயுள்ள இந்திய அணி தனது அடுத்த லீக்கில் இதே இடத்தில் வருகிற 21-ந்தேதி பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.
________________________________________________________________________________________________________
கிரீஸ் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
பெண்கள் மட்டும் பங்கேற்கும் ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர் பெர்லினில் நடந்து வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, சுவிட்சர்லாந்தின் ரெபேகா மசரோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரெபேகா மசரோவா 7-6 (7-1), 7-5 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள மரியா சக்காரி அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா விஸ்வாவின் சா்ச்சை வீடியோ குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
15 Feb 2026புதுடெல்லி, அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, முஸ்லிம் சமூகத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்ற சா்ச்சை காணொலிக் காட்சி தொடா்பாக தொடரப்பட்ட மனுக்களை சுப்ரீம்
-
உ.பி.: தலித் இளைஞர் கொலை வழக்கில் 3 குற்றவாளிகள் கைது: என்கவுன்டரில் 2 பேருக்கு காயம்
15 Feb 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் தலித் இளைஞர் கொலை வழக்கில் மூன்று குற்றவாளிகள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்
-
பெங்களூரில் விபத்து - 5 இளைஞர்கள் பலி
15 Feb 2026பெங்களூரு, பெங்களூரில் வேகமாக வந்த கார், பேருந்து மீது மோதியதில் இளைஞர்கள் 5 பேர் பலியாகினர்
-
அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சா் விமர்சனம்
15 Feb 2026கோவை, த.வெ.க. தலைவைர் விஜய் அறியாமையின் உச்சத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்புகிறார்: ராகுல் மீது அமித் ஷா குற்றச்சாட்டு
15 Feb 2026புதுடெல்லி, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி பொய் பரப்புகிறார்.
-
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு மனித நேய மக்கள் கட்சி தீர்மானம்
15 Feb 2026சென்னை, 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மனித நேய மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
2024-25 நிதியாண்டில் மட்டும் தோ்தல் அறக்கட்டளைகள் திட்டத்தில் கட்சிகளுக்கு ரூ.3,826 கோடி நன்கொடை: அதிகபட்சமாக பா.ஜ.க.வுக்கு 82 சதவீதமாம்
15 Feb 2026புதுடெல்லி, தோ்தல் அறக்கட்டளைகள் (எலக்டோரல் டிரஸ்ட்) திட்டத்தில் 2024-25 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு ரூ.3,826.35 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக ஜனநாயக சீா்திருத
-
மறுதணிக்கை செய்வதில் தாமதம்: ஜூன் மாதம் ஜனநாயகன் வெளியீடு?
15 Feb 2026சென்னை, மறுதணிக்கைக்காக ஜன நாயகன் அனுப்பப்பட்ட நிலையில் திரைப்படத்தை தணிக்கை வாரியம் இன்னமும் மறுதணிக்கைக்காக திரைப்படத்தைப் பார்க்காததால் படம் ஜூன் மாதம் அதாவது தேர்தல
-
பாரதம் செழிப்பின் உச்சம் அடையட்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
15 Feb 2026புதுடெல்லி, சிவபெருமானின் ஆசியால் நமது பாரதம் செழிப்பின் உச்சத்தில் அரியணையிட்டு நிலைத்திருக்கட்டும் என்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து
-
வருகிற 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய கட்சியை தொடங்குகிறார் சசிகலா
15 Feb 2026மதுரை, வருகிற 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய கட்சியை சசிகலா தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மாசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலையில் குவிந்த பக்தர்கள்
15 Feb 2026சபரிமலை, சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் மட்டுமின்றி மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காண
-
இந்தியாவில் அமையும் முதல் நீருக்கடியில் செல்லும் சாலை - ரயில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
15 Feb 2026புதுடெல்லி, இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமையவுள்ள சாலை-ரெயில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
விஜய்-திரிஷா குறித்த அவதூறு பேச்சு: நயினாருக்கு ராமதாஸ் கண்டனம்
15 Feb 2026சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசிய நயினார் நாகேந்திரனுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்: 4 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம்
15 Feb 2026தூத்துக்குடி, விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
-
கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா: ராஜ்நாத்சிங் பங்கேற்பு
15 Feb 2026கோவை, கோவை ஈஷா யோக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.


