முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ம.க. எம்.எல்.ஏ.,க்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வோம்: பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பேச்சு

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      அரசியல்
anbumani 2025-01-03

சேலம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் 2 பேர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் குணமடைய பிரார்த்தனை செய்வோம்' என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

சேலம், தருமபுரியில் பா.ம.க., தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின் கவுரவ தலைவரும், பென்னாகரம் எம்.எல்.ஏ.,வுமான ஜி.கே.மணி, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள், ஆகியோர் உடல்நலக் குறைவு எனக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

இந்நிலையில் நேற்று (ஜூன் 19) சேலம், சூரமங்கலத்தில் நடந்த பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு பேர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் குணமடைய வேண்டும். அதற்காக நாம் எல்லோரும் கூட்டு பிரார்த்தனை செய்வோம்.

தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் 100% பொய். நீண்ட நாட்களாக மனதில் சுமையை சுமந்து கொண்டிருக்கிறேன். தி.மு.க.,விற்கு பயம் வந்துவிட்டது வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்கள் யாரும் தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க மாட்டார்கள் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். இதனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தி.மு.க.,வினர் 530 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தனர். 60- 70 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். ஜூலை 25ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,விற்கு பெரிய பாடம் புகட்டப்படும். சேலம், தருமபுரி மாவட்டத்தில் தி.மு.க., ஒரு இடம் கூட வெற்றி பெறக் கூடாது. இவ்வாறு அன்புமணி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து