முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளையாட்டை விட கோலி உயர்ந்தவரில்லை: அஸ்வின்

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      விளையாட்டு
Ashwin 2

Source: provided

லண்டன்: விராட் கோலி விளையாட்டை விட பெரியவரில்லை என இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்டுக்கு முன்பாக அஸ்வின் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.

காப்பாற்றியவர்...

விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பி.ஜி.டி. தொடரில் மோசமாக விளையாடியதே இதற்குக் காரணமாக அமைந்தது. விராட் கோலி ரசிகர்கள், “டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றியவர். அவர் இல்லாமல் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்துவிடும். அவர் மீண்டும் வந்தால் தான் இந்தியாவை காப்பாற்ற முடியும்” எனக் கூறினார்கள்.

உயர்ந்தவர்கள் கிடையாது...

இந்நிலையில், அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: விளையாட்டை விட விராட் கோலி உயர்ந்தவரில்லை. இதற்கு முன்பாக விளையாடியவர்களும் சரி, இனிமேல் விளையாடுபவர்களும் சரி யாருமே விளையாட்டை விட உயர்ந்தவர்கள் கிடையாது. விளையாட்டு மட்டுமே பெரியது. யாருமே தானாக வந்து விளையாட்டுக்கு நன்மை செய்துவிட்டு போய்விட முடியாது. விளையாட்டுதான் அவர்களுக்கு நன்மையோ தீமையோ செய்யும்.

விட்டுச் சென்றுள்ளார்...

எனக்கு விராட் கோலியை பிடிக்கும். அவர் வந்து விளையாடி விட்டுச் சென்றார். போட்டியை நல்ல இடத்தில் விட்டுச் சென்றுள்ளார். தற்போது, அதை யாராவது முன்னோக்கி எடுத்துச் செல்வார்கள். ஷுப்மன் கில், ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல் இவர்களின் ஆட்டத்தைக் காண ஆவலாக இருக்கிறேன். சச்சின், கோலி இவர்களின் ஆற்றலை இவர்கள் மறுபதிலீடு செய்வார்களா எனப் பார்க்க வேண்டும். இது ஒட்டுமொத்த அணியின் பொறுப்பும் தான் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து