முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானுக்கு உதவ தயார்: ரஷ்யா அறிவிப்பால் மேலும் பதற்றம்

திங்கட்கிழமை, 23 ஜூன் 2025      உலகம்
Putin 2023-03-02

Source: provided

மாஸ்கோ : ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 

மத்திய கிழக்கில் ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.ஆனால் தங்கள் அணு ஆயுத திட்டம் அனைத்தும் அமைதி நோக்கத்துக்கானவை என ஈரான் கண்டிப்பாக கூறி வருகிறது. எனினும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் இஸ்ரேல் தலைவர்கள் இதை நம்ப தயாரில்லை. ஈரானால் உடனடியாக அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என கருதுகின்றனர். எனவே ஈரானை அணு ஆயுதம் எதுவும் தயாரிக்காமல் பேச்சுவார்த்தை மூலம் தடுத்து நிறுத்த அமெரிக்கா திட்டமிட்டது. இதற்காக பேச்சுவார்த்தைகளும் நடந்தன.

அதேநேரம் ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களின் இருத்தலுக்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி இஸ்ரேல் கடந்த 13-ந் தேதி திடீரென ஈரான் மீது தாக்குதல் தொடுத்தது. ஈரானின் அணு திட்ட கட்டமைப்புகள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ரஷ்ய அதிபர் மாளிகை கூறியிருப்பதாவது: ஈரானுக்கு என்ன தேவையோ அதை பொறுத்து செய்வோம். பேச்சுவார்த்தைக்கு உதவ தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து