முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் : மைக்கேல் வாகன் வரவேற்பு

வெள்ளிக்கிழமை, 27 ஜூன் 2025      விளையாட்டு
England 2024-05-14

Source: provided

பர்மிங்காம் : இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோப்ரா ஆர்ச்சர் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார்.

இங்கி. வெற்றி...

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 

மீண்டும் அணியில்...

முதல் போட்டியில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சராசரியாகவே இருந்தது. அந்த அணியின் பந்துவீச்சு வலுவாக இல்லை. அதன் காரணமாக, 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.

விரும்புகிறோம்...

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேசியுள்ளார். ஜோப்ரா ஆர்ச்சர் குறித்து அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணிக்காக ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடுவதை நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். 

சிறப்பான வாய்ப்பு...

ஏனெனில், அவர் அணியில் விளையாடும்போது, இங்கிலாந்து அணி மேலும் சிறப்பாக செயல்படும். அவர் அணியில் விளையாடும்போது, பெரிய தொடர்களை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கு சிறப்பாக இருக்கிறது என்றார். ஜோப்ரா ஆர்ச்சர் கடைசியாக இந்தியாவுக்கு எதிராக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அகமதாபாதில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 19 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 19 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து