முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயத்திற்கான நீருக்கு வரி விதிக்க திட்டமா..? மத்திய அரசு விளக்கம்

சனிக்கிழமை, 28 ஜூன் 2025      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, விவசாயத்திற்கான நீருக்கு வரி விதிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதைத் தவிர்க்க, விவசாய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் நீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இது மொத்த நிலத்தடி தண்ணீர் பயன்பாட்டு அளவில் 83 சதவீதமாக இருக்கிறது. தண்ணீர் அதிக அளவில் உறிஞ்சப்படுவதை தடுக்கும் வகையில், மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு மாநிலங்களில் 22 புதிய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், மேற்கூறிய தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு கூறியிருப்பதாவது: விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்படுவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை. நீருக்கு வரி விதிப்பது தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர் பாட்டில் ஏற்கனவே விரிவான விளக்கம் அளித்துவிட்டார். விவசாயிகள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற தகவல்களை வெளியிட வேண்டாம். வெளிப்படத்தன்மை கருதியும் தவறான தகவல் பரப்படுவதை தடுக்கவும் இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து