முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றால அருவியில் அடித்து வரப்பட்ட ராட்சத உடும்பு..!

சனிக்கிழமை, 28 ஜூன் 2025      தமிழகம்
Udumpu-2025-06-28

தென்காசி, குற்றால அருவியில் திடீரென அடித்து வரப்பட்ட ராட்சத உடும்பால் பெண்கள் பயந்து ஓட்டம் பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 4 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தியம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் குற்றாலத்தில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள், அருவிகளில் ஆனந்தமாக குளியல் போட்டு வருகின்றனர். இந்த நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் பல பெண்கள் வரிசையில் நின்று குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அருவியில் அடித்து வரப்பட்ட ராட்சத உடும்பு ஒன்று திடீரென பெண்கள் குளிக்கும் பகுதியில் விழுந்தது. இதைக்கண்ட அங்கிருந்த பெண்கள் பயந்துபோய் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு வந்த தீயணைப்புத் துறையினர், உடும்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த உடும்பை வனத்துறையினர் வனப்பகுதியில் விடும் பணியில் ஈடுபட்டனர். அருவியில் விழுந்த உடும்பைக் கண்டு பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் குற்றாலம் மெயின் அருவி பகுதி சிறிதுநேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து