முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2025      உலகம்
Elon musk 2023-07-13

Source: provided

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில்,  அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை  எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.

“அமெரிக்க மக்களுக்கு மீண்டும் சுதந்திரத்தை கொடுப்பதற்காக அமெரிக்கா கட்சியை  தொடங்கி உள்ளோம். நமது தேசத்தை வீண் செலவு மற்றும் ஊழல் மூலம் திவால் செய்கின்றனர். இதை பார்க்கும்போது நாம் ஜனநாயக ஆட்சி முறையின் கீழ் இல்லாமல் ஒரு கட்சி முறையின் கீழ் தான் வாழ்கிறோம் என்பது தெரிகிறது” என தனது எக்ஸ் தளத்தில் மஸ்க் கூறியுள்ளார்.

முன்னதாக, எக்ஸ் தளத்தில் அமெரிக்க சுதந்திர தினத்தன்று (ஜூலை 4) ‘அமெரிக்க கட்சி’ என்ற புதிய கட்சி தொடங்குவது குறித்து மஸ்க் கேள்வி எழுப்பி இருந்தார். ‘யெஸ்’ அல்லது ‘நோ’ பாணியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சர்வேயில் சுமார் 12 லட்சத்துக்கும் மேலானவர்கள் பங்கேற்றனர். அதில் 65 சதவீதம் பேர் ‘ஆம்’ என்று பதில் அளித்தனர்.

இதையடுத்து, “இரண்டில் ஒருவருக்கு புதிய அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என கூறியுள்ளனர். அது நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்” என சனிக்கிழமை அன்று மஸ்க் உறுதி அளித்திருந்தார். இந்நிலையில், சொன்னபடி அமெரிக்க கட்சியை தொடங்கி உள்ளார். டொனால்டு ட்ரம்ப் அரசு முன்மொழிந்த ‘பிரமாண்டமான பட்ஜெட்; அழகான பட்ஜெட்’ என்ற மசோதா அமலுக்கு வந்த மறுநாளே அரசியல் கட்சி தொடங்குவேன் என மஸ்க் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த மசோதா அண்மையில் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து