முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2025      தமிழகம்
ISRO 2024-12-16

Source: provided

சென்னை: நிசார் செயற்கைக்கோளை  வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக 'நாசா- இஸ்ரோ செயற்கை துளை ரேடார்' (நிசார்) என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர். இது அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும்.

இதனை கடந்த 2023-ம் ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது நிசார் செயற்கைக்கோளில் உள்ள பூமி மற்றும் ரேடார் ஆண்டெனா பிரதிபலிப்பானைப் பயன்படுத்துவதற்கு சாதகமான நிலை இல்லாத ''கிரகணப் பருவம்" காரணமாக ஏவுதலில் தாமதம் ஏற்பட்டது. சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக நடப்பாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு நிசார் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் தேதி தள்ளிப்போனது. 

இந்த நிலையில் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு வருகிற 16-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தனர். சில தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இந்த செயற்கைக்கோள் ஏவுதல் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.  

2 ஆயிரத்து 800 கிலோ எடை கொண்ட நிசார் செயற்கைக்கோள் 3 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்டுள்ளது. அத்துடன், 6 ஆயிரத்து 500 வாட்ஸ் சக்தி திறன் உள்ளது. சுமார் ரூ.1,805 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளில், நாசா ரூ.1,016 கோடியும், இஸ்ரோ ரூ.788 கோடியும் செலவிட்டுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து