முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2025      விளையாட்டு
Subman-Gill-Virat-Kohli -20

Source: provided

பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

180 ரன்கள் முன்னிலை... 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 180 ரன்கள் முன்னிலை பெற்றது. 180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி இந்திய அணி விளையாடியது.

ராகுல் அரைசதம்... 

இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 300 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 28 ரன்கள், கருண் நாயர் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் அரைசதம் கடந்தார். அவர் 84 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும்.

கில் சதம்... 

இதனையடுத்து, ஜோடி சேர்ந்த கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணைக் கேப்டன் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 58 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். சிறப்பாக விளையாடிய கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார்.

சாதனை முறியடிப்பு...

சதம் விளாசியதன் மூலம், டெஸ்ட் போட்டி ஒன்றில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த (இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து) வீரர் என்ற சாதனையை கேப்டன் ஷுப்மன் கில் படைத்துள்ளார். இதற்கு முன்பாக, கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் 344 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது. 54 ஆண்டுகளாக தொடர்ந்த இந்த சாதனையை தற்போது ஷுப்மன் கில் முறியடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து