முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: மத்திய அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 10 ஜூலை 2025      உலகம்
Central-government 2021 12-

வாஷிங்டன் டி.சி., அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்திற்கான இறுதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில்  பேசும்போது,  இங்கிலாந்துடனும், சீனாவுடனும் ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இந்தியாவுடன் ஒப்பந்தம் முடிய கூடிய நிலையில் உள்ளது என கூறியுள்ளார். இதனால், புதிய வரி விதிப்புகளுக்கான நாடுகளின் பட்டியலில் இந்தியா இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்காக, அந்நாட்டுடனான பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் இந்தியா உள்ளது. இதனை வர்த்தக துறையின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் நேற்று உறுதிப்படுத்தி உள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான தலைமை பேச்சுவார்த்தை நடத்துபவராகவும் அகர்வால் உள்ளார்.

இந்தியா தரப்பில், இதுவரை 26 நாடுகளுடன் 14-க்கும் மேற்பட்ட வெளிப்படையான வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இங்கிலாந்துடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் ஒன்று முன்னேற்ற நிலையில் உள்ளது. அமெரிக்காவுடனும் ஒப்பந்தம் இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைக்கான முயற்சி நடந்து வருகிறது என அவர் கூறியுள்ளார். இதேபோன்று ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. நியூசிலாந்துடன் வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து