முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஸ்: வைஷாலி முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 15 ஜூலை 2025      விளையாட்டு
Vaishali-Pragnananda 2023-1

Source: provided

பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடர் 6 சுற்றுகள் மற்றும் இறுதிப்போட்டியை கொண்டது.

இதில் இந்திய வீராங்கனை தமிழகத்தை சேர்ந்த வைஷாலி 3-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை கரிசா யிப் உடன் மோதினார். இதில் வைஷாலி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஹரிகா துரோனவள்ளி, கிரீசின் ஸ்டாவ்ரூலா சோலகிடோவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

__________________________________________________________________________________________

இங்கிலாந்து மன்னருடன் சந்திப்பு

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் ஒரே மாதிரி 387 ரன்கள் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்னில் அடங்கியது. இதனால் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா  170 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. ஜடேஜா 61 ரன்களுடன் (181 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் , வீராங்கனைகள் இங்கிலாந்து மன்னர் சார்லஸை கிளாரன்ஸ் மாளிகையில் நேற்று சந்தித்தனர் இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

__________________________________________________________________________________________

ஜடேஜாவுக்கு குவியும் வாழ்த்துகள்

இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி கடைசி நாளில் 12 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 193 ரன்கள் தேவையான நிலையில் அதை சேஸ் செய்ய முடியாவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜடேஜா தனியாளாகப் போராடி 181 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மற்ற வீரர்கள் ஆட்டமிழந்ததால் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  இந்த ஒரு போட்டி மட்டுமல்ல, இதுமாதிரி பல போட்டிகளில் ஜடேஜா தனியாக நின்று விளையாடியுள்ளார். இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஜடேஜாவைப் போர்வீரன் எனப் பாராட்டி வருகிறார்கள். சி.எஸ்.கே. அணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தளபதி ஜடேஜா எனக் கூறுவதற்கான காரணம் என அவர் அடித்த ரன்களை பட்டியலிட்டுள்ளது.

__________________________________________________________________________________________

சேஸிங்கில் சொதப்பும் இந்தியா

இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி கடைசி நாளில் 12 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 193 ரன்கள் தேவையான நிலையில் அதை சேஸ் செய்ய முடியாவில் ஆட்டமிழந்தது. ஜடேஜா தனியாளாகப் போராடினாலும் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்ததால் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

சச்சின் ஓய்வுக்குப் பிறகு, டாப் 8 அணிக்கு எதிராக 150-க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்யாமல் இந்திய அணி 26 முறை தோல்வியும் 2 முறை வெற்றியும் 7 முறை சமனிலும் முடிந்துள்ளது. 2021-இல் பிரிஸ்பேனிலும் 2024-இல் ராஞ்சியில் மட்டுமே இந்திய அணி வென்றுள்ளது. சச்சின் டெண்டுல்கர் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தப் புள்ளி விவரங்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

__________________________________________________________________________________________

வரலாறு படைத்த போலண்ட்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஆஸ்திரேலியாவின் எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பிங்க் பந்தில் நடைபெற்றது. ஜமைக்காவில் நடந்த இந்தப் போட்டியில் ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 225க்கு ஆட்டமிழக்க, மே.இ.தீ. அணி 143க்கு ஆட்டமிழந்தது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 121க்கு ஆட்டமிழக்க, மே.இ.தீ. அணி வெற்றிபெற 210 ரன்கள் தேவையாக இருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய மே.இ.தீ. அணி 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியில்தான் ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலியர்களில் டெஸ்ட்டில் ஹாட்ரிக் எடுத்தவர்களில் 11-ஆவது வீரராக போலண்ட் இணைந்துள்ளார். கடைசியாக 2010-11 தொடரில் பீட்டர் சிடில் எடுத்திருந்தார். உலக அளவில், பிங்க் பந்தில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீரராக சாதனை படைத்துள்ளார். பல போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த போலண்டுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

__________________________________________________________________________________________

இங்கி. வீரர் காயத்தால் விலகல்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 193 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து தவித்துக் கொண்டிருந்தது. அதன்பின்னர், ஜடேஜா - சிராஜ் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி அணியை மீட்கப் போராடினர். கடைசி கட்டத்தில் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சோயிப் பஷீர் வீசிய பந்தில் சிராஜ் போல்டானர்.

போட்டியின் போதே சுண்டு விரல் காயத்தால் அவதிப்பட்டு வந்த 21 வயதான சோயிப் பஷீர், சிராஜ் விக்கெட்டை வீழ்த்தி இந்திய ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினர். இந்த நிலையில், சுண்டு விரலில் எலும்பு முறிவால் அவதிப்பட்டுவரும் அவருக்கு இந்த வார இறுதியில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள விருப்பதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால், அவர் இந்தத் தொடரில் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோயிப் பஷீருக்குப் பதிலாக ஜாக் லீச் அல்லது லியாம் டாஸன் இருவரில் ஒருவர் இடம்பிடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

__________________________________________________________________________________________

தரவரிசை:  சின்னர் முதலிடம்

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில்  நிறைவடைந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சினெரும் (இத்தாலி), மகளிர் பிரிவில் இகா ஸ்வியாடெக்கும் (போலந்து) சாம்பியன் பட்டம் வென்றனர். இதனையடுத்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் பிரிவில் ஜானிக் சின்னர் மாற்றமின்றி முதலிடத்தில் தொடர்கிறார். அல்காரஸ் 2-வது இடத்தில் நீடிக்கிறார். ஸ்வரெவ் 3-வது இடத்திலும், டெய்லர் பிரிட்ஸ் 4-வது இடத்திலும் (ஒரு இடம் உயர்வு), ஜாக் டிராபர் (ஒரு இடம் குறைந்து) 5-வது இடத்திலும் உள்ளனர். முன்னணி வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-வது இடத்தில் இருக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தில் அரினா சபலென்காவும் (பெலாரஸ்), 2-வது இடத்தில் அமெரிக்காவின் கோகோ காப்பும் மாற்றமின்றி தொடருகிறார்கள். விம்பிள்டன் பட்டத்தை வசப்படுத்திய ஸ்வியாடெக் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இதன் இறுதிசுற்றில் தோல்வி அடைந்த அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவா 5 இடங்கள் எகிறி தனது சிறந்த தரநிலையாக 7-வது இடத்தை பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து