முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா., பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்; நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்

புதன்கிழமை, 16 ஜூலை 2025      உலகம்
UN-India 2024-03-16

Source: provided

நியூயார்க் : ஐ.நா., படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா.,வில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ் தெரிவித்தார்.

நியூயார்க்கில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் நடந்த உயர்மட்ட ஆலாசனை கூட்டத்தில், இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ் பேசியதாவது: ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பு படையினருக்கு எதிராக குற்றங்கள் இழைக்கப்படும் வழக்குகளில் நீதி கிடைக்க வேண்டும். ஆபத்து மிகுந்த போர்க்களங்களில் அமைதி காக்கும் பணி மேற்கொள்ளும் ஐ.நா., படையினரின் பணி, மிகுந்த சிக்கலானது. ஆனால், ஐ.நா., படையினர் தாக்கப்படும் குற்றங்களில், பெரும்பாலானவற்றில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. இத்தகைய பொறுப்பற்ற தன்மை, சர்வதேச அமைதி காப்பு நடவடிக்கைகளை கடுமையாக பாதிக்கிறது. குற்றவாளிகளை ஊக்குவிப்பதாக உள்ளது.

எனவே, ஐ.நா., படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதை நிறைவேற்றுவது நமது பொதுவான கடமை. உலகளாவிய ஐ.நா. அமைதி நடவடிக்கைகளின் செயல்திறனும், நம்பகத்தன்மையும் தான் நமது எதிர்காலத்திற்கான அடிப்படையாகும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து