முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவம்பரில் பூமி மீது வேற்று கிரகவாசிகள் படையெடுப்பு? விஞ்ஞானிகள் தகவலால் அதிர்ச்சி

புதன்கிழமை, 30 ஜூலை 2025      உலகம்
Scientists 2025-07-30

நியூயார்க், பூமி மீது நவம்பரில் வேற்று கிரகவாசிகள் படையெடுப்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் மீது வருகிற நவம்பரில் மர்ம விண்வெளி பொருள் ஒன்று தாக்கம் ஏற்படுத்த போகிறது என விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர். பூமியை நோக்கி மேன்ஹேட்டன் நகரம் அளவிலான அந்த மர்ம பொருள் ஏவப்பட்டு உள்ளது என அவர்கள் எச்சரித்து உள்ளனர். அது, நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்து நிறைந்த ஒன்றாக இருக்கும். அந்த பொருளுக்கு விஞ்ஞானிகள் 3I/அட்லஸ் (இதற்கு முன்பு A11pl3Z என அறியப்பட்டு இருந்தது) என ஆய்வாளர்கள் பெயரிட்டு உள்ளனர். 

இந்த மர்ம பொருள், ஏலியன்களின் தொழில் நுட்பம் உதவியுடன், பூமி மீது திடீர் தாக்குதல் நடத்த கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர். ஏலியன்களை பற்றிய ஆய்வில் ஈடுபட்டு, அதற்காக பெரும் பங்காற்றி வரும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பிரபல வான்இயற்பியலாளர் அவி லோயப். சர்ச்சைக்குரிய முரண்பாடான விசயங்களை வெளியிட்டு வருபவர். 2017-ம் ஆண்டில், முதன்முறையாக சூரிய குடும்பம் அல்லாத விண்கல் ஒன்று பூமியின் அருகில் வந்தது.இதனை பற்றி குறிப்பிட்ட அவி, அது வேற்றுகிரகவாசிகளின் செயற்கையான விசாரணையில் ஒன்றாக இருக்க கூடும் என கூறி அப்போது சர்ச்சையை ஏற்படுத்தினார்.

 இந்நிலையில், விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ள அந்த மர்ம பொருளானது, நவம்பர் இறுதியில், சூரியனை நெருங்கி வரும். அப்போது, பூமியின் பார்வையில் இருந்து அது மறைவாக இருக்கும். இதனால், ரகசிய அதிவிரைவான சூழ்ச்சியான விசயங்களை அது நடத்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

சிலியில் உள்ள ரியோ ஹர்டாடோ பகுதியில் உள்ள தொலைநோக்கி ஒன்று முதன்முறையாக இந்த மர்ம பொருளை கண்டறிந்தது. 10 முதல் 20 கி.மீ. அகலம் கொண்ட இந்த பொருள் விநாடிக்கு 60 கி.மீ. வேகத்தில் நம் பூமியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனை வருகிற செப்டம்பர் வரை தொலைநோக்கி வழியே பூமியில் இருந்து காணலாம். அதன்பின்னர், அது சூரியனை நெருங்கி விடும். இதனால், பூமியில் இருந்து, அப்போது அதனை தெளிவாக காண முடியாது. அதற்கு பின்னர், டிசம்பர் மாத தொடக்கத்தில் சூரியனின் மறுபுறம் இருந்து அந்த மர்ம பொருள் தெரிய தொடங்கும். 

வருகிற நவம்பர் வரை ஏலியன்களின் நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்றும் அதன்பின்னர் அவர்களுடைய செயல்பாடுகளின் தாக்கம் என்னவாக இருக்கும் என்றும் ஆவலாக பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து