முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூதாட்ட செயலி வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நேரில் ஆஜர்

புதன்கிழமை, 30 ஜூலை 2025      சினிமா      இந்தியா
Prakash Raj 2023-11-24

ஐதரபாத், சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக அமலாக்கதத்துறை விசாரணைக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜரானார்.

ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ஜீட் வின், பரிமேட்ச், லோட்டஸ் 365 உள்ளிட்ட சூதாட்ட செயலிகள் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, குறிப்பிட்ட சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் திரைப் பிரபலங்கள் நடித்திருப்பது தெரியவந்தது. 

மேலும், பிரபல நடிகர்களின் விளம்பரங்களை நம்பி, சூதாட்ட செயலிகளைப் பயன்படுத்தி ஒருவர் 3 கோடி ரூபாய் வரை பணத்தை இழந்ததாக புகார் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, பிரபல நடிகர்களான பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.

அதன்படி, ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் பிரகாஷ் ராஜ் நேற்று ஆஜரானார். பிரகாஷ் ராஜ் தவிர, ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. விஜய் தேவரகொண்டா ஆகஸ்ட் 6 ஆம் தேதியும், மஞ்சு லட்சுமி ஆகஸ்ட் 13 ஆம் தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ராணா டகுபதி ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்டதால் ஆகஸ்ட் 11  ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து