முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிந்தூர் நடவடிக்கையின்போது ட்ரம்ப் - மோடி இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை : மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்

புதன்கிழமை, 30 ஜூலை 2025      இந்தியா
Jaisakar 2025-07-30

Source: provided

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - பிரதமர் நரேந்திர மோடி இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் இது தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதற்குக் காரணம், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு கையாண்ட திருப்திப்படுத்தும் அரசியலே. அப்போது பிரதமர் நேரு, இந்த ஒப்பந்தம் நல்லெண்ணம் மற்றும் நட்பின் அடையாளம் என்று கூறினார். ஆனால் நமக்கு கிடைத்தது பயங்கரவாதமும் வெறுப்புமே. பாகிஸ்தானின் பஞ்சாப் விவசாயிகள் மீது நேருவுக்கு இருந்த அக்கறை, காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் விவசாயிகள் மீது இல்லை.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்தியா தாக்கியது என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் - இவை உலகிற்குத் தெரியும். பாகிஸ்தானுடன் நாங்கள் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க மாட்டோம். இந்த விஷயம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு விவகாரம்.

அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி.வான்ஸ் பிரதமர் மோடியிடம் பேசினார். சில மணி நேரத்தில் பாகிஸ்தான் இந்தியாவை தாக்கும் என்று எச்சரித்தார். அத்தகைய தாக்குதலுக்கு தகுந்த முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்று மோடி கூறினார். உலகின் எந்தத் தலைவரும் இந்தியா தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சொல்லவில்லை. இது தொடர்பாக நடந்த உரையாடல்கள் எதிலும் வர்த்தகம் குறித்து பேசப்படவில்லை. ஏப்ரல் 12 முதல் ஜூன் 12 வரை பிரதமருக்கும் அதிபர் ட்ரம்ப்புக்கும் இடையே எந்த தொலைபேசி உரையாடலும் நிகழவில்லை என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து