முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் சட்டசபை தேர்தல்: இன்டியா கூட்டணி 7-ம் தேதி ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 3 ஆகஸ்ட் 2025      இந்தியா
INDIA 2023-08-30

Source: provided

ஜம்மு : பீகார் சட்டசபை தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக வருகிற 7-ம் தேதி இன்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம்  டெல்லியில் நடப்பதாக  பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. அதேநேரம் அங்கு ஆட்சியை கைப்பற்ற ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் இணைந்த இன்டியா கூட்டணியும் தீவிரமாக களத்தில் இறங்கி இருக்கிறது.

இந்த தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக வருகிற 7-ம் தேதி இன்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் ஒன்று டெல்லியில் நடப்பதாக தேசிய மாநாடு தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

ஜம்முவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இது குறித்து கூறுகையில், 'பீகார் தேர்தலிலும் வாக்கு திருட்டு மூலம் வெற்றி பெற பா.ஜனதா திட்டமிட்டு உள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். அவரை நான் சந்திக்க உள்ளேன். இன்டியா கூட்டணியின் அனைத்து தலைவர்களும் வருகிற 7-ம் தேதி சந்திக்கிறார்கள். அப்போது அவரிடம் இது குறித்து கேட்டு உண்மையை தெரிந்து கொள்வேன்' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து