முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஆகஸ்ட் 2025      சினிமா
Madanbab- 2025-08-02

Source: provided

சென்னை : மறைந்த நடிகர் மதன் பாப் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

நகைச்சுவை நடிகா் மதன் பாப் (71) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலமானாா். நகைச்சுவை நடிகரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான மதன் பாப் ‘தேவா் மகன்’ ‘நீங்கள் கேட்டவை’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாா்.

இவரது வித்தியாசமான சிரிப்பு மிகவும் பிரபலம். தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளா், நிகழ்ச்சி நடுவா் உள்ளிட்டவற்றிலும் பங்கெடுத்து வந்தாா். குறிப்பாக, தொலைக்காட்சி ஒன்றில் ‘அசத்தப் போவது யாரு?’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்டாா். சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், மதன் பாப் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து