Idhayam Matrimony

கடந்த 6 வாரங்களிலிருந்து கற்றுக்கொண்டது இதுதான் எதை சொல்கிறார் சுப்மன் கில்?

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Ghill

Source: provided

லண்டன்: கடந்த ஆறு வாரங்களிலிருந்து கற்றுக்கொண்டது இதுதான் என சுப்மன் கில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் நாயகன் கில்...

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 2-2 என டிராவில் முடிந்துள்ளது. இந்த டெஸ்டில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் அபாரமான விளையாடி 4 சதங்களுடன் 700 ரன்களுக்கு மேல் குவித்தார். இதனால் இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் சுப்மன் கில்லை தொடர் நாயகனாக தேர்வு செய்துள்ளார்.

முக்கியத்துவம்...

ஆட்ட நாயகன் தொடர் விருது வென்ற சுப்மன் கில் கூறியதாவது:- இரண்டு அணிகளும் விளையாடிய விதம் மிகவும் சிறப்பானது. இறுதி நாளான இன்று (நேற்று) முடிவு யாருக்கு என்பது தெரியாமல் இரு அணிகளும் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தின. சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது, கேப்டன்ஷியை எளிதாக நோக்கலாம். நாங்கள் இன்று (நேற்று) காலை விளையாடியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

நியாயமான பிரதிபலிப்பு...

நாங்கள் மிகவும் உறுதியாக இருந்தோம். நேற்று கூட, அவர்களுக்கு நெருக்கடி இருந்தது எங்களுக்கு தெரிந்தது. நாங்கள் அதை முழுவதுமாக அப்படியே வைத்துக் கொள்ள விரும்பினோம். சிராஜ் கேப்டனுடைய கனவு. ஒவ்வொரு ஸ்பெல் மற்றும் ஒவ்வொரு பந்திலும் தனது பங்களிப்பை கொடுத்தார். தொடர் 2-2 என சமனில் முடிந்தது நியாயமான பிரதிபலிப்பு.

திருப்திகரமாக...

இது இரண்டு அணிகளும் எவ்வளவு ஆர்வமாக இருந்தன மற்றும் எப்படி வெளிப்படுத்தின என்பதை காட்டுகிறது. இந்தத் தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பதே எனது நோக்கமாக இருந்தது. அவ்வாறு அமைந்தது திருப்திகரமாக இருக்கிறது. நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை. கடந்த ஆறு வாரங்களிலிருந்து கற்றுக்கொண்டது இதுதான்.

இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து